பிளாஸ்டிக் சர்ஜரி

அடிபட்டு சிதைந்த உடலின் பாகங்களை நமது உடலின் திசுக்களை கொண்டே சரி செய்து காயங்களை ஆற்றி பழைய நிலைக்குக் கொண்டு வந்து குணப்படுத்துவது பிளாஸ்டிக் சர்ஜரியின் இலக்கு ஆகும்.தொழிற்சாலை விபத்துகளில் ,சாலை விபத்துக்களில் விரல்கள் ,கைகள், கால்கள் ஆகியன பாதிக்க நேரிடுகிறது. தோல் ,சதை ,நரம்புகள் ,இரத்தக்குழாய்கள் சேதமடைகின்றன. கைகள் கால்களின் அமைப்பு சிதைகிறது. வேலை தடைபடுகிறது. அழகு கெடுகிறது.இதனை சரியான நேரத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சரி செய்கிறோம்.

➤ பிளாப் கவரேஜ் என்னும் முறையில் வேறு இடத்திலிருந்து ரத்த ஓட்டம் உள்ள சதையை சதை சிதைந்த இடத்தில் நகர்த்திப் பொருத்தி புண்களை ஆற்றலாம். நரம்புகளை ரிப்பேர் செய்து பழையபடி வேலை செய்ய வைக்க முடிகிறது. விரல்களில் சதை குறைபாடு இருந்தால் அருகில் உள்ள விரல்களிலிருந்து சதையை டிரான்ஸ்பர் செய்து விரலை காப்பாற்ற முடிகிறது,பெரிய அளவில் சதை தேவைப்படும் பொழுது இடுப்புப் பகுதி சதையை ட்ரான்ஸ்ஃபர் செய்து புண்ணை ஆற்ற முடிகிறது.மேலோட்டமான காயங்களை தோல் மட்டுமே எடுத்து வைத்து விரைவாக ஆற்ற முடிகிறது.

➤ இவைகளை மிக விரைவாகவும் மிகச் சிறப்பாகவும் செய்வதற்காக நவீன அறுவை சிகிச்சை கருவிகளும் மைக்ராஸ்கோப்புகளும் நம்மிடத்தில் உள்ளன. தோலெடுத்துப் பொருத்துவது,சதையை எடுத்து பொருத்துவது ,நரம்புகளை இணைப்பது ,தசைநார்களை இணைப்பது ,இரத்தக் குழாய்களை இணைப்பது, விரல்களை புனரமைப்பது ஆகியன நமது மருத்துவமனையில் சிறப்பாகச் செய்யப்படும் பிளாஸ்டிக் சர்ஜரிகள் ஆகும்.

To follow/subscribe our Social Media pages