ஆர்த்ரோஸ்கோபி

ஆர்த்ரோஸ்கோப் என்பது மூட்டுகளை ஆராய உதவும் துளைக்கருவி. சிறுதுளைகள் மூலம் மூட்டுகளில் உள்ளே ஒரு கேமராவையும் ஒளிதரும் கருவியையும் செலுத்தி மூட்டின் உட்பகுதியை ஆராய முடிகிறது. சிறு பகுதி கூட உருப்பெருக்கம் செய்து உற்று நோக்க முடிகிறது,இதனால் மூட்டில் உள்ளே ஏற்படும் சிறுசிறு காயங்களையும் வலிகளையும் சரிவர அறிந்து கொள்ளவும் அவற்றை சரி செய்யவும் முடிகிறது.

➤ வயிற்றின் உள்ளே லேப்ராஸ்கோப் என்னும் கருவியை செலுத்தி ஆபரேஷன்கள் செய்வது போல இது மூட்டுகளுக்கு செலுத்தப்படும் ஒரு கருவியாகும்..இதன்மூலம் கிழிந்த ஜவ்வுகளைத் தைக்கலாம். மூட்டின் உள்ளே வளரும் தேவையற்ற சதை வளர்ச்சியை அகற்றலாம்.பெரிய ஜவ்வுகள் கிழியும் போது அவற்றை மறு உருவாக்கம் செய்யலாம்.

➤ இவை அனைத்தையும் பெரிய அளவில் தழும்புகள் இல்லாமல் செய்யலாம். மூட்டின் அசைவுகள் பாதிக்கப்படாமல் அறுவை சிகிச்சைகள் செய்ய முடியும். விரைவில் வேலைக்கு திரும்ப முடியும். சிலருக்கு விளையாட்டுகளில் அடிபட்டு முழங்காலில் ஏ சி எல் என்னும் ஜவ்வு கிழிந்து விடும் அதனை மறுஉருவாக்கம் செய்கிறோம். ஒருசிலருக்கு மெனிஸ்கஸ் என்னும் ஜவ்வு கிழிந்து போகும் போது அதனை ரிப்பேர் செய்கிறோம்.

➤ தோள்பட்டையில் சிலருக்கு திரும்பத்திரும்ப மூட்டு விலகி விடுவது உண்டு. அது தோள்பட்டை எலும்பில் உள்ள குறைபாட்டால் வரலாம் அல்லது உள்புறம் உள்ள ஜவ்வு கிழிந்து ஆறாமல் இருந்தாலும் அப்படி நேரலாம். இதனையும் மூலம் ரிப்பேர் செய்து அந்த ஜவ்வு வளர ஆறச் செய்ய முடியும் .இத்தகைய அறுவை சிகிச்சைகளை மிக நவீனமான கருவிகள் கொண்டு மிக தரமான முறையிலும் பெரிய நகரங்களை விட மிகக் குறைந்த செலவிலும் நம் மருத்துவமனையில் செய்கிறோம்.


To follow/subscribe our Social Media pages