மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

மனித முழங்கால் மூட்டுக்கள் வலுவானவை. நிற்க, நடக்க, உட்கார,குந்த வைக்க, சம்மணங்கால் போட, குதிக்க, நீந்த, தாவ என அத்தனை உடலியல் செயல்களுக்கும் இவை இன்றியமையாதவை. ஆனால் அவை தாங்கும் எடையும், வேலை செய்யும் நேரமும் அதிகமாகும் பொழுது அவை தேய ஆரம்பிக்கின்றன.

➤ முதலில் எலும்புகளின் நடுவில் உள்ள பாதுகாப்பான ஜவ்வுகள் தேய ஆரம்பிக்கின்றன. பிறகு குருத்தெலும்புகள் தேய்ந்து அதன்பின் கடினமான எலும்பே தேய ஆரம்பிக்கிறது.ஓரளவு தேய்ந்த பிறகு மூட்டு வளைய ஆரம்பிக்கும். தேய்ந்து வளைந்த மூட்டுக்கள் நடையை மற்றும். வலியைக் கொடுக்கும். மூட்டு அசைவைக் குறைக்கும். படி ஏற, நடக்க சிரமம் தரும்.

➤ மூட்டுத் தேய்மானத்தை ஆரம்ப நிலையில் மருந்து மாத்திரைகள் மூலமாகவும் பயிற்சிகள் மூலமாகவும் ஓய்வின் மூலமாகவும் குணப்படுத்த முடியும்.ஆனால் மூட்டுகள் அதிகளவு தேய்ந்து வளைந்து விட்டால் அவற்றை சரி செய்ய அறுவை சிகிச்சை தேவைப்படும். மிக அதிகமாக தேய்ந்த இந்த மூட்டுகளின் தேய்ந்த பாகங்களை அகற்றி காலை நேராக்கி புதிய செயற்கை மூட்டுகள் பொருத்தி வலியின்றி நடக்க வைக்க முடியும்.

➤ உலகம் முழுக்க பல லட்சம் பேர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டு நலமாக இருக்கிறார்கள். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஒவ்வொரு வருடமும் 6 முதல் 7 லட்சம் பேர் இதுபோன்ற மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டு வழியின்றி பழைய வாழ்வை வாழ்கிறார்கள். நமது நாட்டிலும் அறிவியல் அறிவு வளர வளர பல்லாயிரக்கணக்கானோர் இந்த சிகிச்சையை விரும்பிச் செய்து கொள்கிறார்கள்

➤ நமது மருத்துவமனையில் கடந்த 7 ஆண்டுகளாக இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து வருகிறோம் இங்கு இறக்குமதி செய்யப்பட்ட மூட்டுக்கள்,நம் நாட்டிலேயே தயாரான மூட்டுக்கள் மற்றும் தங்கமுலாம் பூசப்பட்ட மூட்டுகள் ஆகியன பொருத்தப்படுகின்றன.

இதற்கான பிரத்தியேகமான அறுவைசிகிச்சை அரங்கமும் அதற்கேற்ற நவீன கருவிகளும் நம்மிடம் உள்ளன லேமினார் ப்ளோ சிஸ்டம் பவர் எக்யூப்மென்ட் போன் சிமெண்ட் ஆகியன பெரும் உதவியாக இருக்கின்றன. தனிப்பட்ட முறையிலும் தனியார் மற்றும் அரசு காப்பீட்டு திட்டங்களிலும் இந்த சிகிச்சை மிக சிறப்பாக நமது மருத்துவமனையில் செய்யப்படுகிறது.

To follow/subscribe our Social Media pages