முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைகள்

முதுகு தண்டுவட எலும்புகள் உடலுக்கு வடிவத்தை தருகின்றன.உயரத்தை தருகின்றன. நிமிர்ந்து நடக்கச் செய்கின்றன. குனிய ,திரும்ப ,உட்கார உதவி செய்கின்றன. மூளையிலிருந்து நரம்புத் தண்டு முதுகெலும்புத் தொடரில் உட்பக்கமாகவே கீழே செல்கிறது. நரம்புகளின் பாதுகாப்புக்காக எலும்புகளால் ஆன பெட்டகம் தான் முதுகெலும்புத் தொடர் ஆகும்.

➤ விபத்துக்களால் உயரத்தில் இருந்து கீழே விழுவதால் முதுகுத்தண்டு எலும்புகள் உடையலாம். அவற்றின் நடுவில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படலாம். முதுகு எலும்பு முறிவை அறுவை சிகிச்சை மூலம் நேராக்க முடியும். விரைவில் பணிகளுக்கு திரும்ப வைக்க முடியும். சில சமயங்களில் அறுவைசிகிச்சை இல்லாமலேயே மாவுக்கட்டு போன்ற முறைகளில் எலும்புகளை சரி செய்ய முடியும். மயிரிழை அளவு உடைந்த எலும்புகளை அதிகம் நகராத முறிவுகளை மாவுக்கட்டு மூலம் அசையாமல் சில வாரங்கள் பத்திரமாக வைத்திருந்தால் எலும்பு வளர்ந்து இணைந்து விடும்.

பெடிக்குலர் ஸ்க்ரூ சிஸ்டம் என்னும் புதிய கருவிகளும் சி ஆர்ம் என்னும் ஊடுகதிர் நுண்ணோக்கியும் முதுகு தண்டுவட சிகிச்சைகளை சிறப்பாக, நேர்த்தியாகச் செய்ய உதவுகின்றன. விளையாட்டுக்களின் போதும் விபத்துக்களின் போதும் முதுகு எலும்பு நடுவில் உள்ள டிஸ்க் என்று சொல்லப்படும் முதுகு இந்த ஜவ்வு நகர்ந்து தண்டு வடத்தையோ நரம்புகளையோ அழுத்துவதால் மிக அதிகமான வலி உண்டாகிறது.

➤ இத்தகைய ஜவ்வு விலகலை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றி தண்டுவடத்தை, நரம்புகளை நாம் பாதுகாக்க முடியும். வலியை நிறுத்த முடியும். இதனை வழக்கமான ஓப்பன் சர்ஜரி முறையில் செய்யமுடியும்.அதுபோலவே மைக்ராஸ்கோப் மூலமாகவும் எண்டாஸ்கோபி மூலமாகவும் நம்மால் மிகச் சிறந்த முறையில் இந்த அறுவை சிகிச்சைகளை செய்ய முடிகிறது.

To follow/subscribe our Social Media pages