பயிலரங்கம்

தமிழ்நாடு எலும்புமுறிவு மருத்துவ சங்கத்தின் சார்பாக நமது மருத்துவமனையில் பயிலரங்கம் நடந்தது.இதில் தமிழ்நாடு எலும்புமுறிவு மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர் திரு ரமேஷ் பாபு அவர்கள் கலந்து கொண்டார்கள்.பவானியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளின் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

இந்தப் பயிலரங்கத்தில் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு எப்படி செயல்பட வேண்டும்- எப்படி நோயாளியை கையாள்வது -எப்படி உயிர்காக்கும் சிகிச்சையை தொடங்குவது- எப்படி அதனைத் தொடர்வது -எப்படி வெற்றிகரமாக அந்த சிகிச்சையை முடிப்பது- என்பன போன்றவை விரிவாக சொல்லித் தரப்பட்டன.இதுபோன்ற ஒரு பயிலரங்கம் பவானியில் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.பயிலரங்கத்தில் பங்குபெற்ற அனைவரும் மிகுந்த திருப்தியுடனும் நிறைய கற்றுக்கொண்ட மனநிறைவுடனும் திரும்பினார்கள்.



தலைக்கவசம் விழிப்புணர்வு ஊர்வலம் பல விபத்துகளில் உயிரிழப்பு நடைபெறுவதற்கு தலைக்காயமே முக்கிய காரணமாக இருக்கிறது. சாதாரணமாக குளியல் அறையில் வழுக்கி விழுவது முதல் பெரிய விபத்து வரை தலையில் படும் பலத்த அடியால் மூளை பாதிப்படைகிறது.மூளை என்பது மண்டை ஓட்டின் உள்புறமாக பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு உறுப்பு ஆகும்.இதிலிருந்துதான் உடலுக்கு தேவையான இயக்க கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. உணர்வுகள், செய்திகள் ,பார்வை ,கேட்டல் பேச்சு ,ஞாபகம் என அனைத்தும் மூளையின் செயல்களே.மூளையைச் சுற்றி மூன்று உறைகளும் மூளை தண்டுவட திரவமும் உள்ளன.தலை காயத்தின் போது நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளை பாதிப்படைகிறது.

மூளையில் ரத்தம் உறைந்து செயல்பாடு பாதிக்கப்படலாம். மூளையில் வீக்கம் வந்து சமநிலை கெடலாம். மூளை திசுக்கள் கூட விபத்தினால் சேதமடையலாம். இத்தகைய பாதிப்புகளால் உயிருக்கு ஆபத்து நேரிடுகிறது. சில சமயம் உறுப்புகள் பாதித்து பக்கவாதமோ, பேச்சு இழப்போ ,பார்வை குறைபாடோ கூட வரலாம்.

➤ வருமுன் காப்பது சாலச்சிறந்தது.

➤ அதி வேகம் கூடாது.

➤ தலைக்கவசம் தேவை.

இதனை வலியுறுத்தி பவானியின் காவல்துறை நண்பர்களும் நமது மருத்துவமனையும் தமிழக எலும்பு முறிவு மருத்துவர் சங்கமும் இணைந்து ஒரு இருசக்கர வாகன பேரணி நடத்தினோம். பவானி முழுக்க ஊர்வலமாக வந்து இருசக்கர வாகன பேரணி மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மிகச்சிறந்த நினைவில் நிற்கும் நிகழ்வாக அது நடைபெற்றது.

To follow/subscribe our Social Media pages