சில வினாக்கள் சில விடைகள்

1.நவீன எலும்பு முறிவு மருத்துவம் நாட்டு வைத்தியத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது?

அடிபட்ட இடத்தை எக்ஸ்ரே படம் எடுத்து எலும்பு முறிந்த விதம் அறிகிறோம். அதற்கேற்ப மாவுக்கட்டு போடுகிறோம் அல்லது அறுவை சிகிச்சை செய்கிறோம். உடைந்த எலும்பு சரியாகப் பொருந்தி உள்ளதா என மீண்டும் எக்ஸ்ரே எடுத்து உறுதி செய்கிறோம். உடைந்த பகுதியில் உள்ள மூட்டுகளுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கிறோம். எலும்பு வலுவாகத் தகுந்த மருந்து மாத்திரைகள் தருகிறோம். கூடி விட்டதா என்பதையும் அறிந்து நோயாளிகளை நடக்க வைக்கிறோம். நவீன மருத்துவம் அறிவியல்பூர்வமானது.நாட்டு வைத்தியம் அப்படியல்ல.

2. மாவுக்கட்டு எப்படி எலும்பை இணைய வைக்கிறது?

முறிந்த எலும்பு தானாகவே இணையும் தன்மை கொண்டது. ஆனால் கோணலாகவோ வளைந்தோ ஒன்றன் மேல் ஒன்றுஏறியோகூடிவிடும். அப்படி ஆகாமல் எலும்பை நேராக மாவுக்கட்டு வைத்திருக்கிறது. ஆகவே நன்றாக எலும்பு கூடும் வரை மாவுக் கட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

3. மாவுக்கட்டுகளால் பக்கவிளைவு இல்லையா?

பெரிய எலும்புகள் இணைய இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். அவ்வளவு நாட்கள் கட்டு இருந்தால்மூட்டுகள் இறுகி விடும். சில சமயம்மாவுக்கட்டு தளர்ந்து எலும்புகள் கட்டுக்குள் நகரலாம். இதனால்தான் பெரிய எலும்புகள் முறிந்தால் ஆபரேஷன் செய்கிறோம்.

3. எலும்பு அறுவை சிகிச்சைகளின் நன்மைகள் என்ன?

எலும்பு உடைவதற்கு முன் எந்த மாதிரி இருந்ததோ அதே மாதிரி பொருத்தி விடலாம். பிளேட் ஸ்க்ரூ போன்றவற்றால் அசையாமல் எலும்பை இணைக்கும் போது வலி விரைவில் அடங்கும். கை கால்கள் நேராக இருக்கும். மூட்டுகளை விரைவாக அசைக்கலாம். விரைவாகப் பணிக்குத் திரும்பலாம்.

4. அறுவை சிகிச்சைகளுக்கு வயது வரம்பு உண்டா?

இல்லை. வளர்ச்சியைப் பாதிக்கும் முறிவாக இருந்தால் குழந்தைகளுக்குக் கூட ஆபரேஷன் தேவைப்படலாம். பெரும்பாலும் வயதானவர்களுக்கே எலும்பு முறிவு ஏப்படுகின்றது. ஆரோக்கியமான உடல்தான்முக்கியமே தவிர வயது அல்ல. நூற்றி இரண்டு வயதான தாத்தாவுக்குக்கூட இடுப்பு எலும்பை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து பழையபடி நடக்க வைத்திருக்கிறோம்.

5. சிறு துளை அறுவை சிகிச்சை என்றால் என்ன?

மூட்டு நோய்களுக்கு சிறிய அளவில் துவாரம் போடப்படுகிறது. அதன்மூலம் கருவிகளை உடலின் உள்ளே செலுத்தி காமிரா மூலம் பார்த்து ஆபரேஷன் செய்ய முடிகிறது. எலும்பு முறிவுகளையும் இதேபோல சி ஆர்ம் கருவிகள் மூலம் பார்த்து பொருத்துகிறோம். இதில்சிறிய தழும்புகள்தான் தெரியும். குறைவான இரத்த சேதாரம் மட்டுமே. விரைவாக வேலைக்கும் திரும்பலாம்.

6. ஒரு உடைந்த எலும்பு சரியாக எவ்வளவு நாட்கள் ஆகும்?

விரல் முறிவுகள் மூன்று நான்கு வாரங்கள். முழங்கை முறிவு ஆறு முதல் எட்டு வாரங்கள். தொடை எலும்பு கால் எலும்பு ஆகியவற்றுக்கு 12 வாரங்கள் ஆகும்.பெரிய எலும்பு கூட அதிக நாட்கள். குழந்தைகளுக்கு விரைவாக கூடும். வயதானவர்க்கு சற்று தாமதமாகலாம்.

7. எலும்புகூடாமல் போனால்?

ஏராளமான நாட்டு வைத்திய நோயாளிகள் எலும்பு கூடாமல் வலியுடன் வருகிறார்கள். சிலர் கோணலாக எலும்பு பொருந்திகைகால்கள் வளைந்து போய் வருகிறார்கள். இதற்கெல்லாம் அறுவை சிகிச்சையே தீர்வு. சில சமயம் வேறு இடங்களில் இருந்து எலும்பு எடுத்து உடைந்த இடத்தில் நிரப்ப வேண்டி வரலாம்.

8. எலும்பு எடுக்கப்பட்ட இடத்தில் பிரச்சினை வராதா?

வராது. அங்கே தேவையான எலும்பு மீண்டும் வளர்ந்து விடும்.

9. உடம்புக்குள் ப்ளேட் ஸ்க்ரூ போன்றவற்றை பொருத்துகிறீர்கள். அதனால் பக்க விளைவுகள் இல்லையா ?

இல்லை. அவை உடலோடு ஒத்துப்போகும் தன்மை உள்ளவை. அலர்ஜி ஆகாது.

10. அவற்றை திரும்ப வெளியே எடுக்க வேண்டுமா?

வயது குறைவானவர்களுக்கு எடுக்கிறோம். வயதானவர்களுக்கு எடுப்பதில்லை. எலும்பு நன்றாக கூடி வலுவான பிறகு உள்ளே இருக்கும் ப்ளேட்டுக்கு வேலை இல்லை. எனவே எடுப்பதில் தவறில்லை.

11. எலும்பு உடைந்து சரியான பிறகு விளையாடலாமா? கடினமான வேலைகள் செய்யலாமா?

தாராளமாக. மூன்று மாதங்களில் பல எலும்புகளும் கூடிவிடும். என்றாலும் ஆறு மாதங்களுக்குப் பிறகு விளையாடுவதும் கடின வேலைகள் செய்வதும் பாதுகாப்பானது.

12. நமது ஊரில் எலும்பு அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கும் கோவை சென்னை சென்று பார்ப்பதற்கும் என்ன வேறுபாடு?

அதே இட்லியை நமது ஊரில் சாப்பிடுவதற்கும் ஆம்புலன்ஸ் அல்லது ஆம்னி எடுத்துக்கொண்டு கோவை சென்று சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம்தான்.

13. அப்படி என்றால் பவானியிலும் கோவையிலும் ஒரே மாதிரியான சிகிச்சைதானா?

கோவை என்றல்ல. உலகம் முழுவதும் எலும்பு முறிவுக்கான பாலபாடங்கள் ஒன்றே. அடிப்படைத் தத்துவங்கள் , பயிற்சிகள்,செய்முறைகள்,மயக்க மருந்து முறைகள் எல்லாம் ஒரே மாதிரிதான். இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ப்ளேட் ஸ்க்ரூ உலோகங்கள் தான். ஆபரேஷன் தியேட்டர் களில் உபயோகிக்கப்படும் கருவிகள் ஒன்றே. ஸ்விட்சர்லாந்து ட்ரில் மெஷின்கள்,ஜப்பானில் உருவாக்கப்பட்ட சி ஆர்ம் எக்ஸ்ரே கருவிகள்,அமெரிக்காவின் தலைசிறந்த மானிட்டர்கள்,நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏராளமான உபகரணங்கள் என எதிலும் பவானிக்கும் கோவைக்கும் வித்தியாசம் இல்லை. கோவை போன்ற நகரங்களில் அதிக செலவு செய்தால் மட்டுமே நல்ல சிகிச்சை கிடைக்கும் என்ற நமது மனோநிலை மட்டுமே வித்தியாசமானது. சுருக்கமாகச் சொன்னால் பெரிய நகரங்களை விட நமது ஊரில்செலவு குறைவு. வந்து போகும் நேரமும் சிரமமும் குறைவு.

14. எலும்பு முறியாமல் பாதுகாத்துக் கொள்ள முடியுமா?
முடியும். ஏறக்குறைய எண்பது சதவீத முறிவுகள் சாலை விபத்துக்களில் ஏற்படுகின்றன. அதிலும் இருசக்கர வானங்களால் விபத்துகள் அதிகம். சாலை விதிகளைப் பின்பற்றுங்கள்.ஹெல்மெட் அவசியம். வேகத்தைக் குறையுங்கள். வளைவுகளில் கவனமாகத் திரும்புங்கள்.பயணத்தில் செல்போன் பேச வேண்டாம். காரில்பயணித்தால் சீட் பெல்ட் கட்டாயம் அணியவும். கூட்டம் அதிகமான இடங்களில் எச்சரிக்கை தேவை. நாய்கள் மாடுகள் சாலையில் தென்பட்டால் மெதுவாகுங்கள். அவை எப்படித்திரும்பும் என யாருக்கும் தெரியாது.

15. விபத்து காப்பீடு பற்றி?

கார் பைக் போன்ற வாகனங்களை இன்சூரன்ஸ் செய்கிறோம். எதற்கு ?எதிர்பாராதசேத செலவை சமாளிக்க. ஆனால் அனைவரும் மருத்துவ காப்பீடு செய்திருக்கிறார்களா என்றால் இல்லை! ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் மிக அவசியம்.

16. உங்கள் மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கிறீர்களா?

எலும்பு முறிவு சிகிச்சை தவிர முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைகள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் , பிளாஸ்டிக் சர்ஐரி,ஆர்த்ராஸ்கோப்பி போன்ற அனைத்து வகையான சிகிச்சைகளையும் அளிக்கிறோம்.

17. மூட்டு மாற்று ஆபரேஷன் என்றால் பழைய மூட்டை அப்படியே தூக்கி எறிந்து விட்டு புதிய மூட்டை பொருத்த வேண்டுமா?

பலபேர் அப்படித்தான் நினைத்து பயந்து விடுகிறார்கள். ஆனால் நாங்கள் மூட்டின் உராய்ந்து தேய்ந்த பாகங்களை மட்டுமே அகற்றுகிறோம்.அதற்குப்பதிலாக மிகச்சிறந்த உறுதியான செயற்கை பாகங்களைப் பொருத்துகிறோம். ஆபரேஷன் முடிந்த இரண்டு மூன்று நாட்கள் கழித்து நீங்கள் வலியின்றி நடக்கலாம்.

18. நவீன மருத்துவத்தில் எல்லா முறிவுகளுக்கும் தீர்வு உண்டா?

மன முறிவு,மண முறிவு இவற்றைத் தவிர உடலின் எல்லா முறிவுகளையும் இணைக்கிறோம்! உங்கள் வாழ்வின் மீதமுள்ள வருடங்களுக்கு ஓடி ஆடி வாழும்மகிழ்ச்சியை திரும்பக் கொடுக்கிறோம்!

நன்றி!.

To follow/subscribe our Social Media pages